உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா விஜயம்..



சீனாவில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்ரமிசிங்கவுடன் நாளை(13) சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் குறித்த இந்த வட்ட மேசை கலந்துரையாடல் சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ளது.

சீன ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான “ஒரே பிராந்தியம் ஒரே பாதை” என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு இடம்பெற உள்ளது.

சிறப்பு பொறுப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பிரதமரின் இந்த விஜயத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

wpengine

நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

wpengine

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவை வாராந்த சந்தையில் வியாபாரம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine