உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) நாடு திரும்புகிறார்..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வியட்நாமுக்கான பயணத்தை முன்கூட்டியே பூர்த்தியாக்கிக் கொண்டு பிரதமர் இவ்வாறு நாடு திரும்ப உள்ளார்.

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இவ்வாறு தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்புகின்றார்.

ஜப்பானுக்கு சென்றிருந்த பிரதமர் அந்த பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த 16ம் திகதி வியட்நாமுக்கு சென்றிருந்தார். நாளை(19) நள்ளிரவு பிரதமர் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மீதொட்டுமுல்ல அனர்த்தம் காரணமாக பிரதமர் முன்கூட்டியே நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

க.பொ.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு வெளியீடு..

wpengine

எட்டு மணித்தியால நீர் ​வெட்டு

wpengine

உடுவே தம்மாலோக தேரரின் வழக்கு ஒத்திவைப்பு.. (Update)

wpengine