உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணிலை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்



ஸ்ரீலங்காவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ரா-அத் ஹுசைன் இன்று செவ்வாய் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்தார்.

மனித உரிமைகள் பாதுகாத்தல் மற்றும் அதன் மேம்பாட்டிற்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்றிருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு

wpengine

‘கிறீன் கார்ட்’ லாட்டரியை அகற்றுகிறது அமெரிக்கா…

wpengine

ஹேக்கர் ஜனாதிபதியின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து பிரதமருக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine