உள்நாட்டு செய்திகள்

பிரதமர் பின்லாந்து நோக்கி விஜயம்..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(09) பின்லாந்து நோக்கி பயணமாகவுள்ளார். தற்போது, ஜேர்மனுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அங்கிருந்து இன்று(09) பிற்பகல் பின்லாந்து நோக்கிச் செல்லவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவதும், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதுமே, குறித்த இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பின்லாந்து விஜயத்தில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஒரு தொகை ஹெரோயினுடன் 09 ஈரானிய பிரஜைகள் கைது…

wpengine

மீன் வருவாய் இதோ.. – மீன் பிடித்துறை இரு மடங்கு அபிவிருத்தி

wpengine

இன்று பிரதமர் உரை

wpengine