உள்நாட்டு செய்திகள்

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்…



சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6 ஆவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் அதனுடன் இணைந்ததாக இடம்பெறும் சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(08) சிங்கப்பூர் பயணமாகவுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீசின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை நகரங்கள் தொடர்பான மாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் நகர அபிவிருத்தி சுற்றாடலைப் பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.

புதிய உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறா நகரத்தை உருவாக்குதல் என்பதே இம்முறை இம்மாட்டின் தொனிப்பொருளாகும்.

Related posts

வடக்கு மாகாண புதிய ஆளுநரின் நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது

wpengine

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு

wpengine

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

wpengine