உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு இடைக்காலத் தடை…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு இன்று(03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(03) இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், குறித்த மனு பரிசீலிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்..!

wpengine

சிறைச்சாலை அதிகார் மீது கொலைவெறித் தாக்குதல்

Azeem Kilabdeen

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

wpengine