உள்நாட்டு செய்திகள்

பிரதமர் இன்று நோர்வே விஜயம்…


பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இன்று(03) அதிகாலை நோர்வே பயணமாகியுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, நோர்வே பிரதமர் அர்னா சோல்பர், அந்நாட்டின் உயர் உறுப்பினர் சபையின் தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை பிரதமர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே விஜயத்தின் பின்னர் லண்டன் நகரை நோக்கி பயணிக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்திக்கவுள்ளார்.

மீன்பிடி, நீர்வளம் மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர்கள் காவிந்த ஜயவர்தன மற்றும் ஹேஷா விதானகே ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 20க்கு இருபது போட்டி ஒத்திவைப்பு..

wpengine

அரிசியை இறக்குமதி செய்யும் தேவை இருக்காது- அமைச்சர் அமரவீ

News Editor

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine