உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற சபையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்மொழிவிற்கு நேற்று (2020.11.02) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற சபையின் பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி, சபாநாயகரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

தீர்ப்பின் பிற்பாடு வெலிக்கட சென்ற துமிந்த மீண்டும் பாரதூரமான குற்றத்தில்..

wpengine

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி…

wpengine

கடுவல – கொட்டாவ அதிவேக வீதிக்கு பூட்டு

wpengine