ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரசவத்தின் போது தலை தனியாக துண்டான சம்பவத்தினால் அரச வைத்தியசாலையில் பதற்றம்..

(FASTNEWS | INDIA)- அரசு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்தபோது குழந்தையின் தலை தனியே துண்டானது, மற்ற உடல் பாகங்கள் தாயின் வயிற்றில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே கடலூர் காலனியைச் சேர்ந்தவர் பொம்மி . கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு, நேற்றிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கர்பிணி பெண் பொம்மியை கூவத்தூர் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் வைத்தியர் இல்லாததால் பணியிலிருந்த செவிலியர் முத்துகுமாரி பிரசவம் பார்த்துள்ளார்.

குழந்தை முழுமையாக வெளியே வருவதற்கு முன்பே, செவிலியர் குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில், குழந்தையின் தலை துண்டானது, குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் தாயின் வயிற்றில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் பாகங்கள் பொம்மியின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது. தற்போது, அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் டாக்டர் இல்லாத நிலையில் செவிலியர் பிரசவம் பார்த்ததால்தான் தங்களது குழந்தையைப் பறிகொடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உறவினர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செவிலியர் முத்துகுமாரியிடம் கூவத்தூர் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் டாக்டர் இல்லாமல், நர்ஸ் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தபோது குழந்தையின் காலைப்பிடித்து இழுத்ததால் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts

பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் – ஷஹீட் அஃப்ரிடி…

wpengine

கல்கிஸ்ஸ பிரதேசங்களில் ஹெரோயினுடன் ஐவர் கைது!

wpengine

இன்று கண்களை தானம் செய்கிறார் கம்மன்பில…?

wpengine