உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பியருக்கு வரிச்சலுகை வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.



பியர் இறக்குமதிக்கான வரிச் சலுகையை வழங்காது, அத்தியாவசிய பொருட்களின் வரியை நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக முன்னணி பியர் உற்பத்தி நிறுவனமொன்றின் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதனையடுத்தே அரசு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாவோஸ் மற்றும் கம்போடியாவிலிருந்து பியர் இறக்குமதியினை மேற்கொள்வதற்கு அரசு 75 வீத வரிச் சலுகையை வழங்க உத்தேசித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் பியருக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என கருதி அரசாங்கம் இவ்வாறு வரிச் சலுகை வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், பியர் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்காது, அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா கோரியுள்ளார்.

பியர் நாட்டின் அத்தியாவசிய உணவுப்பொருள் கிடையாது எனவும், இதனால் தொற்றா நோய்கள் அதிகரிப்பதாகவும் வைத்தியர் நவீன் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுத்தையை கொலை செய்த இருவர் கைது…

wpengine

ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்பவும் – பிரசன்ன ரணதுங்க

wpengine

சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

wpengine