உலக செய்திகள்

பின்லேடனை அமெரிக்காவிடம் பாகிஸ்தானே ஒப்படைத்தது – செய்மார் ஹர்ஷ்



அல்கொய்தா தலைவர் பின்லேடனை கடந்த 2011–ம் ஆண்டு அமெரிக்க கமாண்டோ படையினர் சுட்டுக் கொன்றனர். அபோதாபாத் நகரில் 3 மாடி கட்டிடத்தில் பின்லேடன் பதுங்கி இருந்ததாகவும்,இந்த தகவலை அறிந்த அமெரிக்க படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பின்லேடனை பாகிஸ்தான் உளவுப்படையினரே அமரிக்க வீரர்களிடம் அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் செய்மார் ஹர்ஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், பின்லேடனை அமெரிக்க கமாண்டோ படையினர் கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவில்லை. கொல்லப்படுவதற்கு முன்பு 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஐ.எஸ். உளவுப்படையினர் பின்லேடனை அபோதாபாத்தில் சிறை வைத்திருந்தனர்.

பின்பு பாகிஸ்தான் உளவுப்படையினரே அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர். அதன்பிற்குதான் பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றனர். பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக பாகிஸ்தான் உளவு படையை சேர்ந்தவர்கள் 150 கோடி ரூபாய் பரிசாக பெற்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத்தீ

wpengine

சமோவா நாட்டில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்

wpengine

தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரிக்கை…

wpengine