உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மீளவும் நிதி அமைச்சின் செயலாளர்…



மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். எச். சமரதுங்க மீண்டும் முன்னிலையாக உள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறித்து அரசாங்க பதில் அச்சகர் கங்கானி கல்பனா ஜனாதிபதி ஆணைக்குவிடம் நேற்று(27) சாட்சியமளித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 2015 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அறிவிக்கப்பட்டதாகவும், 2016 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இம்ரான் கான் நாளை இலங்கைக்கு

wpengine

அரசியலில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறேன்! – அழுகையுடன் கூறிய கீதா குமாரசிங்க

wpengine

இதுவரையில் 2,622 பேர் பூரண குணம்

wpengine