உள்நாட்டு செய்திகள்

பிணை முறி மோசடி – வசந்த சமரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..



மத்திய வங்கியின் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினருமான வசந்த சமரசிங்க இன்று(02) முன்னிலையாக உள்ளார்.

இவர் தனக்கு சாட்சி வழங்க அனுமதிக்குமாறு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், இதற்கேற்ப, ஆணைக்குழு இவரை இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சானக டி சில்வா, மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யு.ஏ. விஜேவர்தனவிடம் இன்று குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் பின்னர், வசந்த சமரசிங்கவிடம் சாட்சி வினவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆணைக்குழு இன்று காலை 10.00 மணிக்கு அதன் தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே. ரி. சித்துசிறியின் தலைமையில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

7 கோரிக்கைகளை முன்வைத்து 21,000 ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பில்…

wpengine

16 நாட்களில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு…

wpengine

பந்துலவின் இரண்டு பதவிகள் திலங்கவிற்கு சமர்ப்பிப்பு?

wpengine