உலக செய்திகள்

பிஜி தீவுகளில் நிலநடுக்கம்…


பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுகளில் இன்று(17) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு தீவுகளை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது.

Related posts

தாலிபான்கள் ஆட்சியில் குழந்தைகளை விற்கும் அவலம்

wpengine

மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வுஹான் நகரம்

wpengine

வடகொரியாவின் பொறுமையை சோதித்தால் சீனா கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும்..

wpengine