உலக செய்திகள்

பிஜி தீவில் நிலநடுக்கம் – 6.7 ரிக்டரில் பதிவு…


தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய துணை பிரதமர் இராஜினாமா…

wpengine

கலிபோர்னியா மாநிலத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை

wpengine

டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ‘டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதி’க்கு மூடுவிழா.

wpengine