கேளிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ சீசன் 3 இன்னும் சில நாட்களில் இதன் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்‌ஷன் மற்றும் முகின் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது அடுத்த போட்டியின் தொகுப்பாளர் யாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் வெளியானது. சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் பெயர்கள் தொகுப்பாளர்களாக அடிபட்டது.

இதில் சிம்பு தான் கண்டிப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

“அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.

3 ஆண்டுகளும் கமல்தான் தொகுத்து வழங்கினார். தற்போது 4-ம் ஆண்டுக்கும் கமல்தான் தொகுப்பாளர் என அந்நிறுவனம் உறுதி செய்திருப்பது நினைவு கூறத்தக்கது.

Related posts

உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில் இலங்கையின் பொம்மலாட்டக் கலை…

wpengine

‘பூமி’ முதல் பாடல் வெளியானது [VIDEO]

wpengine

ஷங்கர் இயக்கத்தில் பாலிவூட் பிரபலம்…

wpengine