உள்நாட்டு செய்திகள்

பா.உறுப்பினர் ரதன தேரருக்கு எதிராக நடவடிக்கை ஐ.தே.கட்சியிடம் கோரிக்கை..



பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதுரலிய ரதன தேரருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் அண்மைக் காலமாக கடும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் குறித்த இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு வந்த ரதன தேரர் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக கட்சியின் தலைவர் ஹெடில்லே விமலசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரதன தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார். எனவே, ரதன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசிமிடம் ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நில அளவை ஊழியர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

wpengine

மாலிங்கவிடமிருந்து மதீஷவிற்கு பாடம்..!

wpengine

சுற்றுநிரூபங்களையும் இரத்து செய்ய அமைச்சரவை பத்திரம்

wpengine