உள்நாட்டு செய்திகள்

பாவனைக்கு தகாத மருந்துவகைகளை வைத்திருந்தமைக்கு ரூ. 75,000 அபராதம்…



பாவனைக்கு தகாத மற்றும் போதை மருந்து வகைககளை தம் வசம் வைத்திருந்த நபரொருவருக்கு எதிராக 75,000 ரூபா அபராதம் விதித்து கொழும்பு கோட்டை நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான லங்கா ஜயரத்ன அவர்கள் நேற்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் இருந்து தாம் ஒதுங்கி இருப்பதாகவும், பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பத்திரிகையில் அறிவித்தல் ஒன்றினை விடுக்குமாறும் நீதிபதி மேலும் உத்தரவு விடுத்துள்ளார்.

சந்தேகநபர் முஹம்மது நவ்ஷாத் நசீம் எனும் பெயருடைய வத்தளை பிரதேசவாசியாவார்.

அவர் ட்ரமடோல்(Tramadol)எனும் போதை மாத்திரை 225g தம் வசம் வைத்திருந்ததாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அனைவரும் ஒன்று கூடப்பட வேண்டிய இடம் குறித்து அறிவித்தல்…

wpengine

ஆணைக்குழுவின் சாட்சி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

wpengine

அமைச்சர் ராஜிதவுக்கு அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் கண்டனம்

wpengine