உள்நாட்டு செய்திகள்

பால்மா விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் றிசாத்



இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக பாராளுமன்றத்தில் 2016ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் போது தெரிவிக்கப்பட்ட விதத்திலேயே பால் மாக்களின் விலைகள் அமையும் எனவும், இது தொடர்பில் பால்மா உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமேயானால், அவர்களுடன் கலந்துரையாடத் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் வழங்க தொ.இலக்கம் அறிமுகம்

wpengine

பசில் – ராஜித சந்திப்பின் உட்கருத்து என்ன

wpengine