உள்நாட்டு செய்திகள்

பால்மா மற்றும் சமையல் எரிவாயுகளது விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை…



பால்மா விலைகள் மற்றும் சமையல் எரிவாயுவினது விலை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து மேலதிகமாக ஆராய நுகர்வோர் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

பால்மா கிலோ கிராம் ஒன்றிற்கான விலையினை 80 ரூபாவினால் அதிகரிக்க பால்மா நிறுவனங்களுக்கு வாழ்க்கைச் செலவு குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை அதிகரிப்பின் போது அதற்கு சமனாக 400g பால்மா பெக்கட் ஒன்றின் விலையும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க பெற்றோலிய திணைக்களம் இணக்கம்

wpengine

70 லட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் 05 பேர் கைது…

wpengine

அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பம்…

wpengine