உலக செய்திகள்

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து…



இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வௌியேற ஆரம்பித்ததைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000 பேர் வௌியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது எரிமலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு இடர்முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அபாயம் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஈரானில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

‘சுவாதி கொலை செய்யப்படும் போது கர்ப்பமாக இருந்தாள்’ – தகவலால் பரபரப்பு

wpengine

கொவிட் – 19 தொற்றுடைய மூன்றாவது நபர் கண்டுபிடிப்பு

wpengine