உள்நாட்டு செய்திகள்

பாலியல் வன்முறையை வெளிக்கொணரும் பணிகளுக்காக இலங்கைக்கு கனடா உதவி..



பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை வெளிக்கொணரும் பணிகளுக்காக இலங்கைக்கு 09 இலட்சம் டொலர்களை கடனாக வழங்க கனடா அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினன் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி ரிட்சு நக்கேன் ஆகியோருக்கு இடையில் குறித்த இந்த நிதி வழங்கல் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிதியானது பொது நிறுவனங்களில் இடம்பெறும் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை’ வெளிப்படுத்தும் செயற்பபாட்டுக்காக வழங்கப்படுகிறது.

குறித்த இந்த செயற்றிட்டம் இனப்பெருக்க சுகாதாரம், உரிமைகள் தொடர்பாகவும் பால்நிலை, பாலியல் அடிப்படையிலான வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்காக இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களை வலுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

#-reeshma

Related posts

பதுளையில் ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் பெறுமதியான தங்கம் மீட்பு..

wpengine

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine