உள்நாட்டு செய்திகள்

பாலியல் லஞ்சம் – சட்டமா அதிபரின் உதவியை நாடும் குற்ற புலனாய்வு பிரிவு


இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில்  சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது .

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பொலிஸாரினால்சமர்ப்பிக்கப்படஉள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்த விசாரணையை மேற்கொண்ட இலங்கை செஞ்சிலுவை சங்கம்,குற்றம் சுமத்தப்பட்ட தொழில்நுட்ப அதிகாரியின் மீது குற்றம் இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தபோதிலும் .உள்ளக விசாரணை அறிக்கையை பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்டம் குறித்து சி.ஐ.டியினர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறஉள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அலி ரொஷானுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று(13) தாக்கல்…

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று(13)…

wpengine

இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் பறிகொடுத்தது…

wpengine