ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாலியல் தொழிலாளியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை



பாலியல் தொழிலாளியான பெண் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்ட பின்னர் அப் பெண்ணை கொலை செய்த நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

லிவர்பூல் நகரைச் சேர்ந்த மெக்ஸைன் ஷோவர்ஸ் எனும் 42 வயதான பெண் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். மைக்கல் வில்லியம்ஸ் எனும் இளைஞரின் வீட்டுக்கு அருகிலிருந்து ஷோவர்ஸின் சடலம் மீட்கப்பட்டது.

பொலிஸார் நடத்திய விசாரணை மூலம், வில்லி யம்ஸே மெக்ஸைன் ஷோவர்ஸை கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தனது வீட்டில் மெக்ஸைன் ஷோவர்ஸ் திருட முயற்சித்ததாகவும் அவரின் விருப்பப் படியே வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார் எனவும் 29 வயதான மைக்கல் வில்லியம்ஸ் கூறினார்.

எனினும், வில்லியம்ஸிடம் திருடுவதற்கு மெக்ஸைன் ஷோவர்ஸ் முயற்சித்தமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என நீதிபதி கூறினார்.

“அப் பெண்ணின் தலையிலும் முகத்திலும் தாக்கியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளீர் என்பதில் இந் நீதிமன்றுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்த நீதிபதி, வில்லியம்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மஹிந்த, கோத்தா பெயர்கள்

wpengine

விமல் வீரவன்ச வங்குரோத்து அரசியல்வாதி!

wpengine

GMOA – ராஜித மீளவும் மோதலில்…

wpengine