உள்நாட்டு செய்திகள்

பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் இலங்கை ஆசிரியர் சங்கம்..


நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக ஆசிரியர் தினத்தில் அந்த சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போக்குவரத்து அபராதத் தொகையானது 15ம் திகதி முதல் அதிகரிப்பு…

wpengine

சேவைகளை பெற்றுக்கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

wpengine

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

wpengine