உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் இடையே இன்று சந்திப்பு



(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் இன்று(18) சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்திக்கவுள்ளதாக தெரிவுக் குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது குறிப்பாக தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ள பல அதிகாரிகள் முன்னிலையாகாதுள்ளமை மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கோரி ஜனாதிபதியால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

மகாநாயக்க தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் றிஷாட்

wpengine

போக்குவரத்தின்போது இடம்பெறும் குற்றங்களுக்கான தண்டப் பணத்தில் மாற்றம் – சரத் விஜிதகுமார

wpengine

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

wpengine