உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற மோதல் சம்பவம் – சபாநாயகரின் விசேட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு …



பாராளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற சிறப்புரிமை பற்றிய குழு, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புவது பற்றிய முடிவை எடுத்திருப்பதுடன், எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என்றும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த 08ம் திகதி கூடிய சிறப்புரிமைக் குழு பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(iFA)

Related posts

சட்டவிரோத பணியாளர்களுக்கு வெளியேற இஸ்ரேல் கால அவகாசம்…

wpengine

கூட்டு எதிரணி ஸ்ரீ.சு.கட்சியுடன் இணையாமல் போட்டியிட தீர்மானம்…

wpengine

மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி…

wpengine