உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்…



பாராளுமன்றத்தில் தற்போதைய நாட்களில் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் தமது ஆட்சியின் கீழ் ஆணைக்குழு நியமித்து விசாரணை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

“.. பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை காலமும் இல்லாதவாறு ஜனநாயக விரோத நிலையயிற் கட்டளைக்கு எதிரான, பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு எதிரான கூட்டங்கள் பல அண்மைய நாட்களில் நடத்தப்படுகின்றன.

இந்நிலைமை சீரானதன் பின்னர் அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்திற்குள் இதுவரை நடந்த செயற்பாடுகள் சம்பந்தமாக சபாநாயகர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் பெறுப்புக் கூற வேண்டி வரும்..” என் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.

Related posts

02 வாரங்களில் பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வௌியிட உத்தரவு

wpengine

ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

wpengine