உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை உடனடியாய் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.



நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் ரூபா.125 மில்லியன் பங்குகளை விலைக்கு வாங்கியமை குறித்த சந்தேகத்தின் பேரிலேயே இது குறித்து நிதி மோசடி விசாரணைப்பிரிவு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.

நாமல் ராஜபக்ச, பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றம் செய்திருப்பதால், அவர் மற்றும் ஏனைய 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கிடைத்துள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில், நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் இரண்டாது குற்றவாளியான இந்திக பிரபாத் கருணாதீர என்பவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இவரை கைது செய்ய சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

‘சினோபார்ம்’ புதனன்று வரும்

wpengine

தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்கள் நாளை

wpengine

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டு விலை

News Editor