உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தனக்கு வேண்டாம் – ரஞ்சன்..



எதிர்வரும் 2017ம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அலுவலக கொடுப்பனவை (மாதாந்தம் ஒரு இலட்சம்) தான் நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பான யோசனை அண்மையில் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் கடன் சுமையை சமாளிப்பதற்காக பொதுமக்கள் தமது வாழ்க்கை முறையை அர்ப்பணித்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தானும் இந்த அர்ப்பணிப்பை செய்ய வேண்டும் என்பது தனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும் என்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கான கொடுப்பனவை வழங்க வேண்டாம் என கோரும் கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Image result for parliament allowance sri lanka

 

Related posts

பதுளை கோர விபத்து : லொறியின் சாரதி கைது

wpengine

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு

Azeem Kilabdeen

மஹிந்தவின் தேர்தல் பேருந்துக்கு 425 இலட்சம் செலவு

wpengine