உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் அதிகரிக்கும் இலக்கு..


பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் இன்று(19)  முன்வைத்துள்ளார்.

அத்துடன், தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவாவது கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அவர்களது அன்றாட தேவைகளையாவது நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சசித்ர சேனாநாயக்க 2.1.7 சட்டத்தின் கீழ் ICC தண்டிக்கிறது..

wpengine

நிந்தவூர் பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – புதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம் திகதி வர்த்தமானியில்…

wpengine