உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களது குண்டுத்தாக்குதலுக்கு நடவடிக்கை.. – சபாநாயகர்



பாராளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற தெரிவிக்குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமீபத்தில் பாராளுமன்றத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியினர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இன்று சபை அமர்வின் போது குறித்த அச்சுறுத்தலை விடுத்தவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் இந்த விடயம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு கவனம் செலுத்தும் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச உள்ளிட்ட இருவர் இவ்வாறான அச்சுறுத்தலை சமீபத்தில் விடுத்திருந்தனர்.

 

####

Related posts

மீளவும் நேரடி விமான சேவைகள்

wpengine

PCR இனை குறைக்க எதிர்பார்ப்பில்லை

wpengine

மதுபான விலைகளில் மாற்றம்

wpengine