உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றினை உடனடியாக கலைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோள்…



பாராளுமன்றத்தினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைத்து பொது தேர்தல் ஒன்றினை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன இன்று(12) கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார், தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் நிலைப்பாட்டுக்கு செவிசாய்த்து, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

அதேவேளை ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தேர்தலில் நடுநிலையான செய்திகளை வழங்கியமைக்காக ஊடகங்கள், இணைய ஊடங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன், ஆயுட்காலம் முடிவடைந்த 3 மாகாணசபைகளின் தேர்தலையும் உடன் நடத்துமாறும் தெரிவித்தார்.

 

#rishma

Related posts

ஹேரத்தின் சுழலில் மிரண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine

கிளைபோசேட் குறித்து தீர்மானம் எடுக்க அமைச்சரவையினால் குழு…

wpengine

அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை

wpengine