உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் இன்று காலை 10.30க்கு கூடவுள்ளது…


சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று(29) காலை 10.30 அளவில் கூடவுள்ளது.

பாராளுமன்ற அமர்வுக்கு இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நுழையும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று(29) காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(29) காலை 8.30 மணிக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற உள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) நீர் விநியோக தடை…

wpengine

சபையில் கைகலப்பில் ஈடுபட்ட எம்.பிக்கள் தொடர்பில் இறுதி முடிவு இன்று

wpengine

சம்பூர் அனல் மின்நிலைய விவகாரம், இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை – இந்தியா.

wpengine