உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றக் கலைப்பு நடக்காது – ராஜித



20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக இருக்க வேண்டும் என்பதை பல தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தரப்பிற்குள் பல கருத்துக்கள் காணப்படுவதாகவும் கடந்த ஆட்சியிலும் இதே நிலை இருந்ததாகவும் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இன்று, நாளை கலைக்கப்பட மாட்டதெனவும் அதற்குள் மேலும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.

நாளை மாத்தறை கூட்டத்திற்கு வருமாறு பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெயரில் அவ்வாறு நினைத்தாற்போல் விளம்பரம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரதன் குறிப்பிட்டார்.

Related posts

இம்ரான் கான் – பிரதமராக மாறிய ஒரு வெற்றிகரமான கிரிக்கெட்டர் வீரர்

wpengine

இரண்டாவது போட்டிற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு…

wpengine

கடும் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை தொடரும்..

wpengine