உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும் (UPDATE)


ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும்

புகையிரத பாதைகளை இன்று மாலையளவில் சீர் செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

பாரவூர்தி இறுகியதில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதம்
பேலியகொட  கலு பாலத்தின் அருகில் பாரவூர்தியொன்று இறுகியமையினால் அப்பகுதி வழியேயான போக்குவரத்து பெரும் பாதிப்பபுக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், குறித்த பாரவூர்தி விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக ரயில சேவைகளும் தாமதமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன் சாரதிகளும் தங்களது வாகனங்களை சீராக ஓரங்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்றைய பாத யாத்திரையில் பங்கேற்போருக்கு நீதிமன்றினால் விசேட தடை.. ..

wpengine

நாடு பூராகவும் 8,355 தன்சல்கள்

Azeem Kilabdeen

இன்று(13) நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்…

wpengine