ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாதையோரங்களில் பணமின்றி ஆணுறைகளை பெற்றுக் கொள்ள condom vending machine… (Photos)



வர்த்தக நிலையங்களில் இல்லாது பாதையோரங்களில் ஆணுறைகளை பெற்றுக் கொள்ளும் வழிமுறையாக condom vending machine பொருத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.

முதல் கட்ட நடவடிக்கையாக கொழும்பு புலர்ஸ் வீதியில் (டொரிண்டன் அருகில்) ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இன்னும் பல இடங்களில் குறித்த இயந்திரம் பொருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த இயந்திரத்தினூடாக தமது கைப்பேசி இலக்கத்தினை அழுத்தி பின்னர் கைப்பேசிக்கு கிடைக்கப்பெறும் PIN இலக்கத்தினை இயந்திரத்தில் பதிவு செய்தால் ஆணுறையினை பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு பக்கட் இற்காக கைப்பேசி மாதப் பற்றுச்சீட்டில் 50/- அறவிடப்படுவதோடு, அது மாதப் பற்றுச்சீட்டில் உள்வாங்கப்படும் என குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

#reeshmaa

Related posts

இலங்கை தேசிய அணியில் கமிந்து மென்டிஸ்… (ஒரு கண்ணோட்டம்)

wpengine

ஜெயலலிதா மரணமும்… ஒரு வாரத்தில் மாறிய காட்சிகளும்!

wpengine

ஓடும் புகை­யி­ர­தத்தில் விநோத திரு­மணம்

wpengine