உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் விரைவில் பதவி நீக்கம்..



பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி விரைவில் பதவிநீக்கம் செய்யப்படவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் நடவடிக்கைகள் காரணமாகவே பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும், குறித்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய கருணாசேன ஹெட்டியாரச்சியின் நண்பரொருவர் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபர் வழங்கியுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி விரைவில் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Related posts

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்

News Editor

தற்காலிக அடையாள அட்டை விண்ணப்பங்கள் 09 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

wpengine

டீசலுக்கான உற்பத்தி வரி ரூ.10ஆல் அதிகரிப்பு..

wpengine