உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கத் தயாரில்லை – பொன்சேகா



தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட ஒருவரின் ஆசனத்தில் தான் அமர மாட்டேன் என பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கள்(7) இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்;

நான் தற்போது பெற்று கொண்டிருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி மிகவும் உயர்வானதொன்றாகும்.

பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுகொண்டு இராணுவத்தினால் என்னிடம் வழங்கப்பட்டிருக்கும் எனது சிறந்த பதவியை ஒருபோதும் அவமதிக்கமாட்டேன்.

அத்துடன் தற்போது எனக்கு அமைச்சரவை அமைச்சரை விடவும் சிறப்பான பதவி கிடைத்துள்ளமையினால் பாதுகாப்பு செயலாளர் பதவியை பெற்றுகொள்ள போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)

 

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 805 ஆக உயர்வு [UPDATE]

wpengine

பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் பேரூந்து சாரதி பலி..

wpengine