Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் பலாலிக்கு சென்ற அவருடன் விமானப் படைத் தளபதி  எயார் மார்சல் சுமங்கல டயஸூம் விஜயம் செய்துள்ளார்.

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்..

wpengine

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு 

Azeem Kilabdeen

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

wpengine