உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு காரணங்களுக்காக சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு இடமாற்றம்



அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடத்தே ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்…

wpengine

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

wpengine

குகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன…

wpengine