உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்ட 12 இலட்சம் பேருக்கும் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்



வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குறித்த உணவுப் பொதியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் 12 இலட்சத்து 50 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளின் 1,300 பேருக்கான பதிவு இம்மாதம் நடுப்பகுதியில்

wpengine

ஏழாவது ஜனாதிபதி இன்று பதவிப் பிரமாணம்

wpengine

நிலந்த ஜயவர்தனவின் கைப்பேசி பறிமுதல்

wpengine