உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்காக இ.போ.ச ஊழியர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தீர்மானம்



மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை சேவையாளர்களுக்காக அதன் சகோதர சேவையாளர்கள் ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சபையின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை குறித்த இடங்களுக்கு கொண்டு செல்ல புகையிரத திணைக்களத்தினால் விஷேட திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் போக்குவரத்தின் ஊடாக கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் பிரதான புகையிரத நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், இலவச போக்குவரத்து சம்பந்தமாக தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை…

wpengine

மத்திய வங்கியிலிருந்து ரூ.14.5 மில்லியன் பணத்தினை மத்திய வங்கியின் தலைவர் சுருட்டியுள்ளார்

wpengine