உள்நாட்டு செய்திகள்

பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒஸ்மன் குணசேகரவின் மனைவி கைது…



பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் சந்தேகத்தின்பேரில் மேற்கொண்ட சோதனையின் போதே, அவரின் இல்லத்திலிருந்து 9mm ரக கைக்குண்டுகள் 46 மற்றும் கைத்துப்பாக்கி உற்பத்தி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஆங்கில மொழி புத்தகம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை பாதுகாப்பில் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

பாதாள உலகக் குழு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள ஒஸ்மன் குணசேகர தற்போது வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Rishma

Related posts

இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு

wpengine

ஏமாற்றப்பட்ட பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்களின் எதிர்பார்ப்புகள்

wpengine

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine