உள்நாட்டு செய்திகள்

பாட்டளியின் வாகனத்தில் மோதிய சந்தீப் குறித்து தந்தை கோரிக்கை



அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் வாகனத்தில் மோதுண்ட இளைஞன் இன்னும் பூரண பூரண சுகமடையாததால் அவரை சுகமாக்கி தருமாறு குறித்த இளைஞனின் தந்தை உதவிகோருகிறார்.

தற்சமயம் ராகம புனர்வாழ்வு வைத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தீப் சம்பத் தங்களை அடையாளம் கண்டு கொள்வதாகவும், ஒரு சில வார்த்தைகளை கதைத்தவாரே திடீரென நித்திரைக்குச் செல்வதாகவும் அவரது தந்தை தயானந்த குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் மிகவும் சிரமப்பட்டு மகன் கதைப்பதாகவும் இவரை வெளிநாட்டுக்கு கொண்டு சென்றால் பூரண சுகமாக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே யாராவது முன்வந்து எனது மகனை குணப்படுத்துவதற்கு உதவுமாறு சந்தீப்பின் தந்தை தயானந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நுஷாட் பெரேரா இராஜினாமா

wpengine

கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய மாணவர்கள்…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine