உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சுறக்ஸா காப்புறுதித் திட்டம்..



அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுறக்ஸா காப்புறுதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலவசக்கல்வியை மேலும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்; காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி சவுத் லாண்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் விசேட பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் தற்போதைய யுகத்திற்கு ஏற்றவகையில் கல்வி தொடர்பில் உன்னதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரஞ்சனுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

News Editor

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ – விசாரணைகள் CID வசம்

wpengine

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

wpengine