உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க யோசனை முன்வைப்பு..


பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைந்தபட்சம் 05  – 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சங்கத்தின் தலைவர் என்.எம்.கே.ஹரிஸ்சந்திர பத்மசிறி இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டண திருத்தங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு பலத்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தயாரில்லை என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts

இன்றும் மழை

wpengine

நெடுங்கேணியில் 250 இந்திய குடும்பங்களை குடியமர்த்தவில்லை…

wpengine

கெசல்கமுவ ஒயாவில் தேயிலை கழிவுகள்.. – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine