உள்நாட்டு செய்திகள்

பாடசாலை அதிபரை முழங்காலிட வைத்த சம்பவம் குறித்து கல்வியமைச்சர் அறிக்கை கோருகிறார்..



பதுளை, தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், மாகாண கல்வி அமைச்சின் பிரதானிகள் மற்றும் குறித்த அதிபரின் செயற்பாடுகள், முதலமைச்சர் கல்வி அதரிகாரிகளை அச்சுறுத்தியிருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

குறித்த அதிபர் முதலில் இவ்வாறான சம்பவம் நடைபெறவில்லையென தெரிவித்திருந்த நிலையில், சில அரசியல் நடவடிக்கைகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே இது வரை நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையைக் கோருவது அவசியம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#rizma 

Related posts

சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்…

wpengine

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்; கிளிநொச்சியில் இராமையா கைது

wpengine

சனல் 4 இன் ஈஸ்டர் தாக்குதல் ஆவணப்படத்தைத் தொடர்ந்து சர்வதேச விசாரணைக்கு கர்தினால் ரஞ்சித் அழைப்பு..!

wpengine