உள்நாட்டு செய்திகள்

பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை தடை…



பாடசாலைவளவில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு உலக சுகாதார தினமான ஏப்ரல் மாதம் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மாத்திரம் சிகரெட்டை விற்பனை செய்வதை தடை செய்வதற்கான உத்தரவு 21 வயதாக அதிகரிப்பதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

wpengine

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்…

wpengine

மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதி

wpengine