உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500m இற்குள் சிகரெட்டு விற்பனைக்கு தடை..



இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA)முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தைப் போன்று புகைத்தலைக் கட்டுப்படுத்த அர்பணிக்கும் பிறிதொரு அரசாங்கம் எப்போதும் உருவாகியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவரால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில்லறை விலைக்கு சிகரெட்டை விற்றல் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500m இற்குள் சிகரெட்டுக்களை விற்பனை செய்தல் போன்றவற்றை தடுக்கத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(rizmira)

Related posts

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

wpengine

பிரபல பாடகர் தனுஷ்கவுக்கு நீதிமன்ற பிடியாணை.

wpengine

மத்திய வங்கியின் தீர்மானம்

wpengine